2024ம் ஆண்டில் பாஜக ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வரும் என்று காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியில் 20,30 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள தலைவர்களின் பதவியை இளைஞர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சித்தாந்தம் ரீதியாக, இந்தியா என்ற அடையாளத்தை பல்வேறு மொழிகள், மதங்கள், காலாச்சாரங்கள், இணைந்து ஒற்றுமையாக உள்ள ஒரு நாடு தான் இந்தியா. இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்தியாவின் ஜனநாயக அமைப்பில் மக்களுக்கு தான் குரலும், உரிமையும் இருக்க முடியும். ஆனால் நரேந்திர மோடி அரசு, அதானி, அம்பானி என்ற இரண்டு கார்ப்ரேட்டுகளுக்காக நடக்கிறது. இந்த முயற்சியில் இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
மக்களுக்கு, எதிராக ஊடகங்களுக்கு எதிராக, அரசியல் கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. ஜனநாயக ரீதியாக பாரதிய ஜனதா கட்சியாலும், நரேந்திர மோடி அரசாளும், உருக்குலைக்கப்பட்ட தேசத்தை மீண்டும் ஒரு வலிமையான இந்தியாவாக, வளர்ச்சி நிறைந்த இந்தியாவாக, ஒற்றுமையும், நல்லிணக்கமும் அன்பும் நிறைந்த இந்தியாவுமாக காங்கிரஸ் கட்சி நிச்சயமாக கட்டமைத்து 2024ல் நரேந்திர மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும். அதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சி ஆரம்பித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.