முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கும், சென்னை விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையம் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வீடுகளில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், தகர்க்கப் போவதாகவும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மிரட்டல் போன் வந்தது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர சோதனை நடத்தியதில் அது புரளி என தெரியவந்தது.
இதையடுத்து மிரட்டல் விடுத்தது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மிரட்டல் விடுத்த திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த தாமரைக் கண்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா போதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து தேனாம்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் இதே போல கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முதல்வர் கருணாநிதியின் வீடு, மு.க ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.