5 ரெயில் நிலையங்கள் ரூ.2 ஆயிரம் கோடியில் உலக தரமாக மாற்றியமைக்கப்படும்!

5 ரெயில் நிலையங்கள் ரூ.2 ஆயிரம் கோடியில் உலக தரமாக மாற்றியமைக்கப்படும்!

எழும்பூர் உள்ளிட்ட 5 ரெயில் நிலையங்கள் ரூ.2 ஆயிரம் கோடியில் உலக தரமாக மாற்றியமைக்கப்படும் என்று மந்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று இரவு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவரை ரெயில்வே அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் ரெயில்வே பிளாட்பாரத்தில் நடந்து சென்று பராமரிப்பு பணிகள், பயணிகள் சேவைகள் குறித்து ஆய்வு செய்தார். ரெயிலுக்காக காத்திருந்த பயணிகளிடமும் அவர் உரையாடினார். அப்போது பயணிகள் சிலர் அவரிடம் ரெயில் நியைத்தில் அடிப்படை வசதிகள் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தனர். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரெயில்வே துறையை மேம்படுத்துவதன் மூலம் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்புகிறார். சிறிய, பெரிய ரெயில்வே நிலையங்களை நவீன முறையில் மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய ரெயில் நிலையங்கள் 2 ஆயிரம் கோடி ரூபாயில் உலக தரமாக மாற்றியமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.