அசாம் கானுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின்!

மோசடி வழக்கில் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் அசாம் கானுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதையடுத்து நேற்று சிறையிலிருந்து வெளியே வந்தார்.

உ.பி.யைச் சேர்ந்த சமாஜ்வாதி மூத்த தலைவரும் அந்த கட்சி எம்.பி.யுமான அசம் கான் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட 88 -க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளுக்காக 2020 பிப்ரவரி முதல் உத்தரபிரதேசத்தின் சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மோசடி வழக்கு ஒன்றில் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அசம்கானுக்கு இடைக்கால ஜாமின் வழங்கினார். இதையடுத்து 27 மாதங்கள் சிறைவாசத்திற்கு பின் நேற்று விடுதலையானார்.