பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.எஸ். அதிகாரி விவேக் குமாரை மத்திய அரசு நியமனம் செய்து இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக இருந்து வந்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி சஞ்சீவ் குமார் சிங்க்ளா, இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டின் தூதராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். 1997 ஆம் ஆண்டு ஐ.எஃப்.எஸ். அதிகாரியான சஞ்சீவ் குமார் சிங்க்ளா, இஸ்ரேல் தலைநகர் டெல் அவீவில் உள்ள இந்திய தூதரகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். இந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக அவர் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அவரது பணியிடமாற்றத்தை அடுத்து, விவேக் குமார் பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். 2004 பிரிவு இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான விவேக் குமார், தற்போது பிரதமர் அலுவலக இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இந்திய கேபினட் நியமனக்குழு விவேக் குமாரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கியதை அடுத்து மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது.