கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.

மாவட்ட நீதிபதிகளாக இருந்த ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சக்திகுமார், கே.முரளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோரை
கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களை 9 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு பரிந்துரை செய்தது.

கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று 9 பேரையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, நிரந்தர நீதிபதிகள் 8 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நூலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி சத்திகுமார் வேறுஒரு நாளில் பதவி ஏற்பார். இன்று பதவியேற்றுள்ள நீதிபதிகள் எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடுத்த மாதம் பணி ஓய்வு பெறுகின்றனர். மேலும் நீதிபதி கே முரளி சங்கர், டி.வி. தமிழ்ச் செல்வி ஆகியோர் கணவன்- மனைவி ஆவர்.