கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாட்டம்!

கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு நேற்று 99-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி கருணாநிதி வாழ்ந்த சென்னை கோபாலபுரம் இல்லத்தின் உள்ளேயும், வெளியேயும் அவரது உருவப்படம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மு.க.ஸ்டாலின் கருணாநிதி உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரிகள் செல்வி, கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

சென்னை சி.ஐ.டி.நகர் இல்லத்தில் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி., உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி உருவப்படத்துக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாகவும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கடந்த 28-ந் தேதி அன்று துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு திறந்து வைத்த கருணாநிதி உருவச்சிலையின் கீழ் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. கருணாநிதி உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் துரைமுருகன்,கே.என்.நேரு, எ.வ.வேலு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், வெள்ளக்கோவில் சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்பட அமைச்சர்களும், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்பட எம்.பி.க்கள், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் எம்.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சித்துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் உள்பட அதிகாரிகளும், தி.மு.க. நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியின்போது, கருணாநிதி சிலையை வடிவமைத்த சிற்பி தீனதாயளனுக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

அதன் பின்னர் கருணாநிதி உருவப்படத்துக்கு தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை ஆகிய 2 பேரும் சேர்ந்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன்., மாவட்ட தலைவரான கவுன்சிலர் சிவராஜசேகர் உள்பட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் துணை தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன், பொது செயலாளர் வீ.அன்புராஜ், துணை பொது செயலாளர் இன்பகனி, வக்கீல் அணி செயலாளர் வீரசேகர் உள்பட நிர்வாகிகளும், ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ தலைமையில் துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் கழக குமார், ஜீவன் மற்றும் தென்றல் நிசார் உள்பட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். கவிஞர் வைரமுத்து, பாலம் கல்யாணசுந்தரம் கருணாநிதி உருவப்படத்துக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தி.மு.க. வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி மற்றும் வெற்றி தமிழர் பேரவை நிர்வாகிகள் உடன் இருந்தனர். அருந்ததியர் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் வலசை ரவிச்சந்திரன், சமூக ஆர்வலர் பாலம் கல்யாணசுந்தரம் உள்பட பலரும் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நினைவிடத்தைச் சுற்றிலும் கருணாநிதியின் பொன்மொழி வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. சமாதி மேலே அவரது உருவச்சிலையும் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அவரது மனைவி துர்கா, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, வெள்ளக்கோவில் சாமிநாதன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள். அதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்றுவரும் கருணாநிதி நினைவு மண்டபம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருக்கு கட்டுமான பணி விவரங்களை அமைச்சர் எ.வ.வேலு விளக்கி கூறினார். கருணாநிதி பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் தி.மு.க. சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அண்ணா நினைவிடத்திலும் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைவரும் மரியாதை செலுத்திவிட்டு புறப்பட்டு சென்றனர்.