அக்னிபாத் திட்டம்: ராணுவத்தில் சமரசம் வேண்டாம்: ராகுல் காந்தி

அக்னிபாத் திட்டம் நமது ஆயுதப்படைகளின் செயல்பாட்டு திறனை குறைக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

முப்படைகளில் வீரர்கள் சேர்ப்பில் அதிரடி மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ‘அக்னிபாத்’ என்ற இந்த திட்டத்தில் சேரும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் பணி செய்யும் வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-

இந்தியா இரண்டு முனைகளில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் போது, அழைக்கப்படாத அக்னிபத் திட்டம் நமது ஆயுதப்படைகளின் செயல்பாட்டு திறனை குறைக்கிறது. நமது படைகளின் கண்னியம் மரபுகள், வீரம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை பாஜக அரசு நிறுத்த வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.