ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட அமைப்பால் நடத்தப்படும் 300 பள்ளிகளை மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்புக்கு மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு தடை விதித்தது. இருப்பினும், ‘பலாஹ்-இ-அம்’ என்ற பெயரில் இந்த அமைப்பு, அறக்கட்டளை நடத்தி வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், இந்த பள்ளிகள் அனைத்தையும் உடனடியாக மூடும்படி இந்த அறக்கட்டளைக்கு ஜம்மு காஷ்மீர் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்கான நோட்டீசையும் அனுப்பி இருக்கிறது. இந்த பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களின் படிப்பு பாதிப்பதை தடுக்க, ஜம்மு காஷ்மீர் அரசு மாற்று ஏற்பாடு செய்துள்ளது.