காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு (வயது 73) கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத்துக்கு (வயது 73) கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதை அவரே ஒரு டுவிட்டர் பதிவில் நேற்று தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், “இன்று எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. வீட்டில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” என கூறி உள்ளார்.