பிரதமர் மோடி ஜூன் 26ம் தேதி ஜெர்மனி பயணம்!

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் ஜூன் 26ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜெர்மனி செல்கிறார்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் ஜூன் 26ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜெர்மனி செல்கிறார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டதில் சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம், மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது .

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில், ஜெர்மனியில் ஸ்க்லோஸ் எல்மாவ், ஜெர்மன் பிரசிடென்சியின் கீழ் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்கிறார். ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி ஜூன் 28-ம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.