‘கிரிப்டோகரன்சி’ எனும் மெய்நிகர் நாணயங்களை, ‘தெளிவான ஆபத்து’ என தெரிவித்து உள்ளார், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்.
மத்திய அரசு, கிரிப்டோகரன்சிகள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை கேட்டு வரும் நிலையில், இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். கிரிப்டோகரன்சியை அனுமதிப்பது குறித்து, துவக்கத்திலிருந்தே ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவை யூக சொத்துக்கள் என, ரிசர்வ் வங்கி தெளிவாக அறிவித்து வருகிறது. “எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல், நம்ப வைப்பதன் அடிப்படையில் மதிப்பைப் பெறும் எதுவும், வெறும் யூக சொத்துதான்” என, சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார்.