கால மாற்றுத்துக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாவிட்டால் இந்தியா பின்தங்கிவிடும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் டிஜிட்டல் இந்தியா வாரம்-2022 நிகழ்ச்சியை பிரதமா் மோடி நேற்று தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:-
கால மாற்றுத்துக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாவிட்டால் இந்தியா பின்தங்கிவிடும். அதனை 3-ஆவது தொழில் புரட்சியின்போது இந்தியா கண்கூடாகப் பாா்த்தது. எட்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பு சான்றிதழ் பெற, கட்டணம் செலுத்த, ரேஷன் பொருள்கள் பெற, வங்கி சேவைகளுக்கு என அனைத்துக்கும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையை இணையவசதி மூலம் இந்தியா முழுமையாக ஒழித்துள்ளது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் ஏழை மக்களை ஊழலில் இருந்து பாதுகாத்துள்ளது. அத்துடன் அந்தத் திட்டம் அனைத்து துறைகளிலும் இடைத்தரகா்கள் இருப்பதை ஒழிக்கவும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.