இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி தீவிரம்!

இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி தீவிரமடைந்து வருவதையடுத்து அதிபர் கோத்தபயா பதவி விலக முடிவு செய்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்கள், தங்கள் கோபத்தை ஆட்சியாளர்கள் மீது காட்டத்தொடங்கினர். இன்று இலங்கை அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே, நேற்று முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்தனர். இன்று காலையிலும் ஏராளமான வாகனங்களில் மக்கள் கொழும்பு நகருக்குள் வருவதைக் காண முடிந்தது. இந்த நிலையில் அதிபர் கோட்டாபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டனர். மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து, அதிபர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்து போலீசாரும் விலகினர். அதிபர் மாளிகை உள்ளே போராட்டக்காரர்கள் நுழைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. முன்கூட்டியே உளவுத்துறை மூலம் இந்த தகவல்களை அறிந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே, மாளிகையில் இருந்து தப்பி விட்டார். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த சொகுசு கார்களில் வலம் வந்தனர். அதிபர் மாளிகைக்குள் இருந்த நீச்சல் குளத்திலும் போராட்டக்காரர்கள் குளிக்கும் காட்சிகளில் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. அதிபர் மாளிகைக்குள் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தேசியக் கொடியை போர்த்தி, அங்குள்ள அறைகள் மற்றும் தாழ்வாரங்களுக்குள் நிரம்பியிருந்தனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அவர்களில் சிலர் நீச்சல் குளத்தில் குளிப்பதும், மற்றவர்கள் படுக்கை மற்றும் சோபாக்களில் அமர்ந்திருப்பதும் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி நேற்று அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை சூறையாடினர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்தை தீ வைத்து கொளுத்தினர். இலங்கை முழுவதும் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும் 13-ம் தேதி பதவி விலக முடிவு செய்துள்ளதாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த அபேவர்தா அறிவிப்பு வெளியிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், பின்னர் கோத்தபய ராஜினாமா செய்துவிட்டதாக ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமிங்கே ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியான நிலையில் அதிபரும் பதவி விலகியதாக கூறப்படுவதால் இலங்கை முழுவதும் கொந்தளிப்பு காணப்படுகிறது.

இலங்கையில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் பிரதமர் வீட்டிற்குள்ளும் புகுந்து தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம் நிலவியது. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகுவதாக அறிவித்த பின்பும் போராட்டக்காரர்களின் கோபம் தணியவில்லை. நேற்று மாலை முதலே போராட்டகாரர்கள் சாரை சாரையாக பிரதமரின் தனிப்பட்ட வீட்டை நோக்கி படையெடுத்தனர். பிரதமரின் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீஸ் வாகனத்தை சத்தம் எழுப்பியவாறே பின்னோக்கி பயணிக்க வைத்தனர். தடுப்பை மீறி மக்கள் பிரதமர் வீட்டிற்குள் புக முயன்றதால் போலீசார் இரண்டுமுறை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

இருப்பினும் ரணில் விக்ரமசிங்கேவின் வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பொருட்களை அடித்து நொறுக்கினர். ஒருகட்டத்தில் பிரதமர் வீட்டையும் அவர்கள் தீவைத்து கொழுத்தினர். மளமளவென பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இருப்பினு இரவு நீண்டநேரம் போராட்டக்காரர்கள் பிரதமர் வீட்டிற்கு வெளியே திரண்டு நின்று முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில் இலங்கை அமைச்சரவையில் மந்திரிகளாக இருந்த ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கரா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். கொழும்பில் நடந்த அமைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று எனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வரும் 13-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தகவல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் மந்திரியாக இருந்த ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கரா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.