தேசிய நியமன ஆணைய பணிகளுக்கு இனி ஆன்லைனில் தேர்வு: ஜிதேந்திரசிங்

தேசிய நியமன ஆணைய பணிகளுக்கு இனி ஆன்லைனில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் கூறினார்.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நல்லாட்சி நிர்வாகம் குறித்த மாநாட்டில் மத்திய அறிவியல்-தொழில்நுட்பம் மற்றும் மற்றும் பொது குறைதீர் துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் கலந்து கொண்டு பேசியதாவது:-

தீர்வு கிடைக்கும் நாட்டில் மோடி பிரதமரான பிறகு கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சான்றிதழ்களின் உறுதி தன்மையை நிரூபிக்க உயர் அதிகாரிகளிடம் பிரமாண பத்திரம் பெற வேண்டும் என்று இருந்தது. அதை பிரதமர் மோடி பதவி ஏற்று மூன்றே மாதத்தில் ரத்து செய்தார். அது ஒரு புரட்சிகரமான முடிவு ஆகும். அதே போல் அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு நடத்தப்படும் நேர்முக தேர்வும் ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசுக்கு முன்பு ஆண்டுக்கு 2 லட்சம் புகார்கள் வந்தன. அது தற்போது 25 லட்சமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு புகார் தெரிவித்தால் அதற்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தேசிய நியமன ஆணையத்தால் பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. அந்த தேர்வு இனிமேல் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். பொருளாதார பலம் முதலில் இந்த தேர்வு 8 மொழிகளில் நடத்தப்படும். அதன்பிறகு அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலும் இந்த தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சமுதாயத்தின் கடைகோடியில் உள்ள மனிதரும் பொருளாதார ரீதியாக பலம் பெற வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம். சிறப்பாக செயல்படும் மாவட்டங்களுக்கு தரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான முறையில் செயல்பட முயற்சி செய்யும். இதனால் மக்களுக்கு பலன் கிடைக்கும். இவ்வாறு ஜிதேந்திரசிங் பேசினார்.