இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார்.
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அரசியல் குழப்பங்களும் நீடித்து வருகின்றன. மக்களின் எதிர்ப்பை அடுத்து, இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச மாலத்தீவிற்கு தப்பியோடினார். மேலும் அவர் பதவி விலகியதை அடுத்து, அங்கிருந்தவாறே பிரதமா் ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் இடைக்கால அதிபராக நியமித்தாா்.
அதன்படி, இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார். இலங்கை தலைமை நீதிபதி முன்பாக அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். மேலும் இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய வருகிற 20 ஆம் தேதி வாக்கெடுப்பு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய, நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, “இலங்கையின் புதிய அதிபர் அடுத்த ஏழு நாட்களுக்குள் தேர்வு செய்யப்படுவார் என்றும், கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் முறையாக ஏற்கப்பட்டு உள்ளது” என்றும் தெரிவித்து உள்ளார்.