கள்ளக்குறிச்சி பள்ளியில் இருந்து பொருட்களை அள்ளிச்சென்ற மக்கள்!

பள்ளியில் இருந்த பொருட்களை எல்லாம் அள்ளிச்சென்றனர். பெஞ்ச், நாற்காலி, ஏசி, உள்ளிட்ட பொருட்களை இரு சக்கர வாகனங்களில் கையில் கிடைத்தது எல்லாம் 2, 3 என அள்ளிச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரே சந்தை போல் காட்சி அளித்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில், உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு நடந்துவந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் போராட்டக்காரர்கள் மாணவி படித்த பள்ளியை தீக்கிரையாக்கினர். போராட்டம் நடைபெற்ற பள்ளி வளாகத்திற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சுற்றுவட்டார கிராம மக்கள் திடீரென கூடியதால்தான் போராட்டம் கைமீறி சென்றதாக மாவட்ட எஸ்.பி. கூறினார்.

இந்தநிலையில் மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். பஸ்களை டிராக்டர் வைத்து இடித்து நாசப்படுத்தினர். மேலும், பள்ளி வளாகத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் போராட்டகாரர்கள் தீ வைத்து எரித்தனர். இது ஒரு புறம் இருக்க, இருப்பதை கிடைத்து சுருட்டி கொண்டு ஓடி விடலாம் என பள்ளியில் இருந்த பொருட்களை எல்லாம் அள்ளிச்சென்றனர். பெஞ்ச், நாற்காலி, ஏசி, உள்ளிட்ட பொருட்களை இரு சக்கர வாகனங்களில் கையில் கிடைத்தது எல்லாம் 2, 3 என அள்ளிச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரே சந்தை போல் காட்சி அளித்தது.