எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

சோனியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கடந்த மூன்று தினங்களாக அமளில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்து 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் 4 மணிக்கு பிறகு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோஷமிட்டதால் அவை நடவடிக்கைகள் முடங்கின. நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.