கடந்த 2019-ம் ஆண்டு பிரிதிவிராஜ் கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இது கட்சியின் விதிமுறைகளுக்கு முரணானது என்று பிரிதிவிராஜ் எதிர்ப்பு தெரிவித்தார்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி பிரிதிவிராஜ். கடந்த 2019-ம் ஆண்டு இவர் கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இது கட்சியின் விதிமுறைகளுக்கு முரணானது என்று பிரிதிவிராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இதற்கு விளக்கம் கேட்டு அப்போதைய கட்சி தலைவர் சோனியா மற்றும் கேரள மாநில, மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு நோட்டீசு அனுப்பினார். இது தொடர்பான வழக்கு கொல்லம் முனிசிபல் கோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் மாநில, மாவட்ட தலைவர்கள் வருகிற ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.