வேலையில்லா திண்டாட்டம் குறித்தும், பணவீக்கம் குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டதாகவும், சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
காஸ் சிலிண்டர் விலை ஏன் ரூ.1,053 உயர்ந்தது. தயிறு, பயிறு வகைகள் மீது ஏன் ஜிஎஸ்டி. சமையல் எண்ணெய் விலை ஏன் 200 ரூபாய் ஆனது. வேலையில்லா திண்டாட்டம் குறித்தும், பணவீக்கம் குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு அரசர், 57 எம்.பி.,க்களை கைது செய்யவும் 23 எம்.பி.,க்களை இடை நீக்கமும் செய்தார்.
அரசர், ஜனநாயக கோவிலில் கேள்விகளைக் கண்டு அஞ்சுகிறார். ஆனால் சர்வாதிகாரிகளை எதிர்த்து எப்படி போரிட வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.