பினராயி விஜயன் காரை வழிமறித்து கண்ணாடியை உடைக்க முயற்சி!

கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் செல்லும் இடங்களில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
மேலும் காரின் கண்ணாடியையும் உடைக்க முயன்றனர்.

கேரளாவில் நடந்த தங்க கடத்தல் வழக்கில் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக இந்த வழக்கில் கைதான ஸ்வப்னா குற்றம் சாட்டினார். இதையடுத்து பினராயி விஜயன் பதவி விலக கோரி கேரளாவில் எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர் காங்கிசார் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பினராயி விஜயன் செல்லும் இடங்களில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று பினராயி விஜயன் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றார். அப்போது இளைஞர் காங்கிரசார் திடீரென கார் முன் பாய்ந்தனர். மேலும் காரின் கண்ணாடியையும் உடைக்க முயன்றனர். அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.