எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 2 செயற்கைக்கோளுடன் எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஸ்ரீஹரிகோட்டா, புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 2 செயற்கைக்கோளுடன், இஸ்ரோவின் சிறிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது. விண்வெளித் துறையின் தேவையைக் கருத்தில் கொண்டு, 500 கிலோ வரையிலான எடையுடன் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக, சிறிய ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. அந்த வகையில், 120 டன் எடையுடன் தயாரிக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, இரண்டு செயற்கைக்கோள்களுடன் காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. 145 கிலோ எடைகொண்ட இஓஎஸ்-2 செயற்கைக்கோள் கடலோர நிலப் பயன்பாடு, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும். இதற்காக 2 நவீனரக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு 8 கிலோ எடைகொண்ட ஆசாதிசாட் என்ற கல்விசார் செயற்கைக்கோளைத் தயாரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் 75 கிராமப்புறப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் கூட்டு இணைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இஓஎஸ், ஆசாதி சாட் செயற்கைக் கோள்களுடன், எஸ்.எஸ்.எல்.வி டி-1 ராக்கெட்டை செலுத்துவதற்கான ஏழு மணி நேர கவுண்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வந்தது. சிறிய ரக ராக்கெட்டுகள் மூலம் செலவு குறைவதுடன், செயற்கைக்கோள் வடிவமைப்பாளர்களின் தேவையும் பூர்த்தியாவதாக இஸ்ரோ கருதுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 500 செயற்கைகோள்கள் இந்தியாவில் இருந்து ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதா என்று விரைவில் அறிவிக்கப்படும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் டேட்டாவை பெறுவதில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் 34 மீட்டர் உயரம் கொண்டது. அதாவது பிஎஸ்எல்வியை விட 10 மீட்டர் உயரம் குறைவானது. இதன் ஆரம் 2 மீட்டர் ஆகும். பிஎஸ்எல்வி ஆரம் 2.8 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் எடை 120 டன். இதன் மூலம் 500 கிலோ கொண்ட செயற்கைகோள்களை விண்ணிற்கு கொண்டு செல்ல முடியும். அதிகபட்சம் 500 கிலோ மீட்டர் வட்ட பாதையில் செயற்கைக்கோளை இது வட்டப்பாதையில் நிறுத்த முடியும்.

இந்த நிலையில் இன்று இரண்டு செயற்கைகோள்களை இந்த எஸ்எஸ்எல்வி விண்ணிற்கு சுமந்து சென்றது. அதில் ஒன்று அரசு பள்ளி மானவைகள் 750 பேர் சேர்ந்து உருவாக்கிய செயற்கைகோள் ஆகும். 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு இந்த செயற்கைகோள் பள்ளி மாணவிகள் மூலம் உருவாக்கப்பட்டது. இதற்கு ஆசாதி சாட் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. EOS-02 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளும் இதில் விண்ணில் அனுப்பப்பட்டது.

இந்த EOS-02 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள். பூமியின் வெப்பநிலை, வானிலை ஆகியவற்றை இது ஆய்வு செய்யும். மாணவிகள் உருவாக்கிய ஆசாதி சாட் 8 கிலோ எடை கொண்டது. இதில் மொத்தம் 75க்கும் அதிகமான வெவ்வேறு சிறிய கருவிகள் உள்ளன. இவை எல்லாம் தலா 50 கிராம் எடை கொண்டது. வானிலை சோதனை உள்ளிட்ட பல விஷயங்களை இந்த 75 பொருட்கள் ஆய்வு செய்யும். இந்தியா முழுக்க 75 அரசு பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகள் இந்த திட்டத்தில் செயல்படுத்தப்பட்டனர். Space Kidz India என்ற அமைப்பு மூலம் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம் இவர்கள் செயற்கைக்கோளை உருவாக்கினர். Space Kidz India மூலம் உருவாக்கப்பட்டபி கிரவுண்ட் சென்டர் இந்த செயற்கைகோள் அனுப்பும் தகவல்களை ஆய்வு செய்யும். இந்த இரண்டு செயற்கைகோள்களை சுமந்து கொண்டு எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட்டது. எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் 3 ஸ்டேஜும் இன்று வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். ஆனால் 2 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

3 ஸ்டேஜ் முடிந்து செயற்கைகோள் நிலைநிறுத்தப்பட்டதும் அதன் டேட்டா பூமிக்கு வர வேண்டும். ஆனால் வட்ட பாதையில் செயற்கைகோள்கள் நிலைநிறுத்தப்படும் முன் டேட்டா பகிர்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டேட்டாவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டேட்டா இழப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறோம்., 2 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதா என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று – இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.