தென்மண்டல கவுன்சிலில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம்!

திருவனந்தபுரத்தில் நடைபெறும் 30வது தென்மண்டல கவுன்சிலில் பங்கேற்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம் செல்கிறார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற செப்டம்பர் 3-ம் தேதி கேரளா பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான்-நிக்கோபார் தீவுகளை உள்ளடக்கியது தென்மண்டல கவுன்சில். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய இந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தின் வாயிலாக அண்டை மாநிலங்களுக்கிடையே நடக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும். குறிப்பாக முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், அந்த கூட்டத்தின் வாயிலாக தமிழகத்தின் உரிமைகளை நிலைநிறுத்தக்கூடிய நடவடிக்கைகளில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபடுவார். அதற்காக திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டதில் அவர் பங்கேற்கிறார்.

ஒருநாள் பயணமாகவே இந்த கூட்டம் அமையக்கூடிய வாய்ப்புள்ளது. அண்டை மாநிலங்களுடன் உள்ள பிரச்சனைகளுக்கு இந்த கூட்டத்தின் வாயிலாக பேசி தீர்வு காணக்கூடிய வாய்ப்புள்ளது. அந்த வகையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.