மேற்கு வங்காளத்தில் துர்கா சிலைகளை கரைக்க சென்ற போது வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வடமாநிலங்களில் நவராத்திரி விழாவையொட்டி துர்கா பூஜை பிரபலமாக நடைபெறும். இறுதியில் விநாயகர் சிலை கரைக்கப்படுவதுபோல துர்கா சிலைகளையும் கரைத்துவிடுவார்கள். இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரியில் உள்ள மால் ஆற்றில் துர்கா சிலை கரைப்பின்போது திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கினர். இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மாயமான பலரை தேடி வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். துர்கா சிலைகளைக் கரைகளைச் சென்று பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் துர்கா பூஜை விழாவின் போது நடந்த அசம்பாவிதத்தால் வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.