அதிமுகவில் மேயர், எம்பி என இருந்து தற்போது பாஜகவில் இணைந்துள்ள சசிகலா புஷ்பாவின் டெல்லி அரசு வீட்டில் வீட்டிலிருந்த பொருட்களை அதிகாரிகள் வெளியே வைத்து வீட்டுக்கு சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக சார்பில், மேயராக 2011 முதல் 2014 வரை இருந்தவர் சசிகலா புஷ்பா. பின்னர் அதிமுக தலைமையுடன் அதிக நெருக்கம் ஏற்பட்டதன் காரணமாக 2011ஆம் ஆண்டில் அதிமுக சார்பாக ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சினை காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கபட்ட நிலையில், அந்த சர்ச்சை அடங்குவதற்க்கு முன் ராமசாமியை சசிகலா புஷ்பா திருமணம் செய்து கொண்டார். இதிலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் உள்ளார். இந்நிலையில் சசிகலா புஷ்பா எம்பியாக நியமனம் செய்யபட்ட போது, அவருக்கு டெல்லியில் தங்குவதற்க்கு மத்திய அரசால் வீடு ஒதுக்கீடு செய்யபட்டது. அவரது பதவிகாலம் முடிவடைந்து 2 வருடம் ஆகியும் இதுவரையில் அரசு குடியிருப்பை காலி செய்யாததால் அவரது குடியிருப்பை முறையாக காலி செய்யும் படி அரசு அவருக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் அரசு குடியிருப்பை காலி செய்யாததால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை வெளியே வைத்து விட்டு அவரது குடியிருப்பிற்க்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.