பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கு வாழ்த்து தெரிவித்து சோனியா கடிதம்!

பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக்குக்கு வாழ்த்து தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவா் சோனியா காந்தி நேற்று கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

பிரிட்டனின் பிரதமராக நீங்கள் (ரிஷி சுனக்) பொறுப்பேற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவில் உள்ள எங்கள் அனைவருக்கும் இது பெருமைக்குரிய விஷயமாகும். இந்தியா-பிரிட்டன் இடையிலான உறவுகள் மிகச் சிறப்பானவை. அந்த உறவுகள், உங்களது பதவிக்காலத்தில் மேலும் வலுப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளாா்.