பிரதமர் மோடியின் அரசியல் சர்வாதிகாரம் நாட்டினை உடைத்துவிடும்: ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் அரசியல் சர்வாதிகாரம் எனவும், அவரது அரசியல் சர்வாதிகாரம் நாட்டினை உடைத்துவிடும் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடியின் கொள்கைகள் பல பொருளாதார மற்றும் சமூக பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் எனவும், அதனை தடுப்பதே ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை யாத்திரையின்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மோடியின் கொள்கைகளால் பொருளாதார மற்றும் சமூக பிரச்னைகள் பல உருவாகும். அதனை நடைபெறாமல் தடுப்பதே ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணத்தின் நோக்கம். பிரதமர் அரசியல் சர்வாதிகாரம் செய்து வருகிறார். அதன் விளைவாக எதிர்காலத்தில் நாடு உடையும் அபாயம் உள்ளது. அதனை நடக்காமல் தடுப்பதே எங்களது நோக்கம் என்றார்.