கவர்னர் பதவியை ஒழிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு

கவர்னர் மாளிகைகள், பா.ஜனதாவின் முகாம் அலுவலகங்களாக மாறிவிட்டன என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள மத்திய அரசு, அரசியல் சட்ட அடித்தளத்தை சீர்குலைக்க முயன்று வருகிறது. அதற்காக கவர்னர் பதவி தவறாக பயன்படுத்தப்படுகிறது. கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கவர்னர் மாளிகைகள், பா.ஜனதாவின் முகாம் அலுவலகங்களாக மாறிவிட்டன. இந்த பின்னணியில், கவர்னர் பதவியை ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இதையொட்டி, வருகிற 29-ந்தேதியை கூட்டாட்சி முறையை பாதுகாக்கும் தினமாக கடைபிடிக்குமாறு கட்சியின் மாநில குழுக்களை தேசிய செயற்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.