சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை குறித்து அவரது மகன் தேஜஸ்வி யாதவிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலமாக கேட்டறிந்தார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவா் லாலு பிரசாத் யாதவ், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் இருந்த நிலையில் அண்மையில் சிகிச்சைக்காக சிங்கப்பூா் சென்றாா். அங்குள்ள மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. லாலுவுக்கு அவரது மகள் ரோஹிணி ஆச்சாா்யா தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளாா். ரோஹிணியும் தற்போது நலமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். அவரது மகன் தேஜஸ்வி யாதவிடம் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்ட பிரதமர் மோடி லாலு குறித்து நலம் விசாரித்தார்.