ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு சட்டப்பேரவைக்கு அதிகாரமுண்டு என வாதிட்டார்.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் விசாரணை நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு காளைகள் குழந்தைகளை போல பராமரிக்கபப்டுகிறது தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும் என தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டார். கடும் விதிமுறைகள் மட்டுமின்றி பல நடைமுறைகளை பின்பற்றியே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என அவர் கூறினார். ஜல்லிக்கட்டு முடிந்த பிறகும் காளைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த தயார் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளார்.
எல்லா செயல்பாடுகளிலும் எதோ ஒரு வகையில் மனித உயிர்கள் பலியாகிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வாகனம் ஓட்டும் போது, பாலங்கள் இடிந்து விழும்போது என எல்லா இடங்களிலும் மனித வாழ்கை முடிகிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக தேவைப்பட்டால் கூடுதல் விதிகளை நீதிமன்றமே வகுக்கலாம் என்று தமிழ்நாடு அரசு வாதம் செய்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் நிறைவு பெற்றது.
ஜல்லிக்கட்டு புகைப்படங்களின் அடைப்படையில் மட்டும் முடிவுக்கு வர முடியுமா என்று பீட்டாவுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பீட்டாவின் வாதங்களை நாளையும் தொடர நீதிபதிகள் உத்தரவு அளித்து விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.