உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் ஏதோ அவசரம் தெரிகிறது: டிடிவி தினகரன்!

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் ஏதோ அவசரம் தெரிகிறது. உதயநிதி விஷயத்தில் அவசரமாக முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். இந்த அவசரத்துக்கான காரணத்தை காலம் உணர்த்தும் என, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகும் விஷயத்தில் ஆளும் கட்சியின் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார். மாறாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உதயநிதி ஸ்டாலின் திமுகவில் சட்டசபை உறுப்பினராக உள்ளார். அதனால் அமைச்சராக்குகின்றனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதில் எந்த தவறும் இல்லை. இருப்பினும் ஒன்று மட்டும் தெரிகிறது. ஸ்டாலின் அவசர வேலையாக அமைச்சர் பொறுப்பு வழங்குவது தெரிகிறது. ஏனென்றால் ஸ்டாலின் 1989ல் சட்டசபை உறுப்பினராக இருந்தார். அப்போது அவரை அவரது தந்தை அமைச்சராக்கவில்லை. உதயநிதி விஷயத்தில் ஏதோ ஒரு அவசரம் தெரிகிறது. இந்த அவசரத்துக்கான காரணம் என்ன என்பதை காலம் தான் உணர்த்தும். இவ்வாறு அவர் கூறினார்.