முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று தமிழக அமைச்சராக பதவியேற்றார்.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றியை பெற்றார் உதயநிதி ஸ்டாலின். அப்போதே உதயநிதி அமைச்சராவார் என கூறப்பட்டது. இருந்தபோதும் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வந்தார் உதயநிதி. கடந்த 19 மாதங்களாக சிறந்த எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வந்தார் உதயநிதி ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், திமுக மூத்த தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.