பாரத் ஜோடோ யாத்திரையில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு உள்ளார்!

காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை நாளை டெல்லிக்குள் நுழைய உள்ள நிலையில் இன்று நடக்கும் கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை நாளுக்கு நாள் வரவேற்பை பெற்று வருகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த மாபெரும் யாத்திரை மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அதோடு இவர் ஊர் ஊராக சென்று யாத்திரை செய்வதால் மக்களை அதிக அளவில் பார்க்கிறார். இதனால் யாத்திரையும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் 20-30 கிமீ தூரத்தை ராகுல் காந்தி நடந்தே கடக்கிறார். தற்போது இந்த யாத்திரைக்கு மக்கள் தரும் ஆதரவும் அதிகரித்து உள்ளது. கட்சி சாராத பொதுமக்கள் பலர் இந்த யாத்திரையில் கலந்து கொண்டு உள்ளனர். தினமும் இவரின் யாத்திரையில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்து கொள்ள தொடங்கி உள்ளனர்.

3750 கிலோமீட்டருக்கு இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. இவ்வளவு தூரத்தையும் ராகுல் காந்தி நடந்தே சென்று கொண்டு இருக்கிறார். தற்போது 100 நாட்களை கடந்து இந்த யாத்திரை சென்று கொண்டு இருக்கிறது. 150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. இந்த யாத்திரை தற்போது டெல்லியில் இணைய உள்ளது. இன்று மாலை டெல்லி எல்லைக்கு அருகே வருவார். அதன்பின் நாளை மாலைக்குள் இவர் டெல்லிக்குள் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை நாளை டெல்லிக்குள் நுழைய உள்ள நிலையில் இன்று நடக்கும் கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு உள்ளார். ராகுல் காந்தியுடன் கனிமொழி யாத்திரையில் கலந்து கொண்டு ஒன்றாக நடந்தார். ராகுலின் வேகத்திற்கு ஈடு கொடுத்து வேகமாக நடந்து சென்றார். கனிமொழி திமுகவின் வண்ணமான கருப்பு சிவப்பு உடையில் இன்று கூட்டத்தில் கலந்து கொண்டார். ராகுல் காந்தியுடன் பேசியபடி இவர் இந்த பயணத்தில் கலந்து கொண்டார். இவர்கள் அங்கே இருந்த மக்களிடமும் பேசி குறைகளை கேட்டறிந்தனர்.