மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.800!

பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 மற்றும் வரிகள், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு ரூ.325க்கு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தொற்றுக்கு எதிரான பூஸ்டர் டோஸாக போடப்படும் தடுப்பூசி பட்டியலில் மூக்கு வழியே செலுத்தப்படும், பாரத் பயோடெக்கின் இன்ட்ராநாசல் கோவிட்-19 தடுப்பூசிக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. முதற்கட்டமாக இந்த ஊசி இல்லாத தடுப்பூசி தனியார் மையங்களில் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் இன்ஸ்டிட்யூட்டின் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸ், ரஷ்யன் ஸ்புட்னிக் V மற்றும் பயோலாஜிக்கல் இ லிமிடெட்டின் Corbevax உள்ளிட்டவை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளாக Cowin போர்ட்டலில் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், iNCOVACC புதிதாக இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தடுப்பூசியின் விலையை பாரத் பயோடெக் நிறுவனத்தின் அறிவித்துள்ளது. மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 மற்றும் வரிகள், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு ரூ.325க்கு கொடுக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பூசி ஜனவரி 4 வது வாரத்தில் இருந்து கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.