ரஷ்ய அதிபர் புடினை பயங்கரவாதி என விமர்ச்சித்த ரஷ்ய எம்பி ஒடிசாவில் பலி!

உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பயங்கரவாதி என பொருள்படும்படி விமர்சனம் செய்த அந்நாட்டின் பெரும்பணக்காரரும் எம்பியுமான பாவெல் அன்டோவ் இந்தியாவில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். ஒடிசாவில் தங்கிய அவர் ஓட்டலின் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளார்.

ரஷ்யாவில் எம்பியாக இருந்தவர் பாவெல் அன்டோவ். தொழிலதிபரான இவர் பெரும் கோடீஸ்வரராவார். இவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அடிக்கடி கடுமையாக விமர்சனம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்தருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பாவெல் அன்டோவ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் பாவெல் அன்டோவ், ‛‛உக்ரைன் மீது ரஷ்யா குண்டுகளை வீசி வருகிறது. இது ஒரு பயங்கரவாத செயல்” என விமர்சனம் செய்திருந்தார். மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பயங்கரவாதி என பொருள்படும்படி அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாவெல் அன்டோவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதன் தொடர்ச்சியாக பாவெல் அன்டோவ் தனது கருத்தை திரும்ப பெற்று மன்னிப்பு கோரினார்.

இந்த நிலையில் தான் பாவெல் அன்டோவ் சுற்றுலாவுக்காக இந்தியா வந்திருந்தார். இவர் உள்பட மொத்தம் 4 பேர் ஒடிசாவின் ராயகடாவில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். கடந்த டிசம்பர் 21ல் இவர்கள் 4 பேரும் ஓட்டலுக்கு வந்தனர். அதிகளவில் மதுபானம் குடித்திருந்தனர். மேலும் அவர் கைவசம் நிறைய மதுபானம் பாட்டில்கள் வைத்திருந்தனர். இந்நிலையில் பாவெல் அன்டோவ் தனது 66வது பிறந்தநாளை அங்கு கொண்டாடினர். இந்நிலையில் தான் ஓட்டலின் 3 வதுமாடியில் இருந்து அவர் கீழே விழுந்து மர்மமான முறையில் இறந்தார். ஓட்டல் 3வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக கீழே விழுந்து அவர் இறந்துள்ளார். இது தற்கொலையா? அல்லது எதிர்பாராத வகையில் விழுந்து இறந்தாரா? என்பது தெரியவில்லை. இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை விமர்சனம் செய்து வந்த நிலையில் அவர் இந்தியாவில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்நிலையில் தான் பாவெல் அன்டோவ் இறந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதவிர கடந்த 22ம் தேதி அவருடன் தங்கியிருந்த நண்பரான விளாடிமிர் மாரடைப்பால் இறந்தார். இதன் தொடர்ச்சியாக தான் பாவெல் அன்டோவ் மர்ம மரணமடைந்துள்ளார். இதனால் இந்த விவகாரம் சர்ச்சையையும், சந்தேகங்களையும் கிளப்பி உள்ளது.

இதுபற்றி ராயகடா எஸ்பி விவேகானந்தா சர்மா கூறுகையில், ‛‛ரஷ்யாவை சேர்ந்த 4 பேர் டிசம்பர் 21ல் ஓட்டலுக்கு வந்தனர். டிசம்பர் 22ல் விளாடிமிர் என்பவர் இறந்தார். பிரதேச பரிசோதனையில் மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அவரது இறப்பால் மனவருத்தத்தால் நண்பர் பாவெல் அன்டோவ் டிசம்பர் 25ல் இறந்துள்ளார். அவரது குடும்ப அனுமதியடன் தகனம் செய்துவிட்டோம். பாவெல் கடந்த ஞாயிற்று கிழமை (டிசம்பர் 25-ந்தேதி) மரணம் அடைந்துள்ளார். அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

இதுபற்றி ஓட்டர் ரிசப்சனிஸ்ட் பிஜய் குமார் சுவாய்ன் கூறுகையில், ‛‛டிசம்பர் 21ல் டெல்லியை சேர்ந்த டிராவல் ஏஜென்ட்டுன் ரஷ்யாவை சேர்ந்த 4 பேர் வந்து தங்கினர். அப்போது அவர்கள் மதுபானம் குடித்திருந்தனர். மேலும் மதுபாட்டில்களுமு் வைத்திருந்தனர். இதுமட்டுமின்றி ஓட்டல் பாரில் இருந்தும் அவர்கள் மதுபானம் வாங்கி கொண்டனர். இந்நிலையில் அன்றைய தினம் 203ம் எண் கொண்ட அறையில் விளாடிமிர் என்பவர் இறந்தார். இதுபற்றி பவெல் அன்டோ மற்றும் கைட் ஆகியோர் டிசம்பர் 22ல் தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் பாவெல் அன்டோவ் 3வது மாடியில் இருந்து விழுந்து இறந்துள்ளார்” என கூறியுள்ளார்.