ரிமோட் எலக்ட்ரானிக் ஓட்டிங் இயந்திரம் ஜனநாயகத்துக்கு பேராபத்து: திருமாவளவன்

இவிஎம் இயந்திரத்தில் பல்வேறு குளறுபடிக்ள் நடப்பதகா புகார் எழுந்துள்ள நிலையில், ரிமோட் எலக்ட்ரானிக் ஓட்டிங் இயந்திரம் அறிமுகம் செய்தால் இந்திய தேர்தல் ஜனநாயகத்தையே அது சீர்குலைத்து விடும். எனவே இந்த முயற்சிகளை கைவிட வேண்டும் என்று தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தேர்தலில் பின்பற்றப்பட்டு வந்த வாக்குச் சீட்டு முறை ஒழிக்கப்பட்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை மீது அவ்வப்போது எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வருகின்றன. மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும் என்பதும் பல கட்சிகளின் குரலாக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது என்றே அதன் மீது சந்தேகம் எழுப்பும் கட்சிகளின் வாதமாக உள்ளது. ஆனால், இந்த சந்தேகங்களை எல்லாம் நிராகரித்துள்ள தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் துளியளவு கூட முறைகேடு செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறி வருகிறது.

இந்த நிலையில், இடம் பெயர்ந்தவர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. வாக்குப்பதிவு குறைவாகிறது பொதுவாக மாநிலங்களின் தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்களின் போது இடம்பெயர்ந்து பிற மாநிலங்களில் வசிப்பவர்கள் குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வேண்டும் என்றால் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள் பலரும் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு செல்வது இல்லை. இதன்காரணமாக வாக்குப்பதிவு குறைவாகிறது. எம் -3 என்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இந்தக் குறையை போக்குவதற்கு திட்டமிட்ட தேர்தல் ஆணையம், உள்நாட்டில் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வசிப்பவர்கள் தங்கள் சொந்த மாநில தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக ஒரு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. இதற்காக எம் -3 என்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையத்திற்காக பொதுத்துறை நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ரிமோட் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் வாக்களிக்க ஒருவர் தங்கள் சொந்த மாநிலம் செல்ல தேவையில்லை என்றும் வசிக்கும் மாநிலத்தில் இருந்தே வாக்களிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் வரும் 16 ஆம் தேதி முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பை விடுத்துள்ளது. இந்த ஆலோசனையின் போது தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப குழுவும் கலந்து கொண்டு செயல்முறை விளக்கங்களை அளிக்கும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், ரிமோட் எலக்ட்ரானிக் ஓட்டிங் இயந்திரம் அறிமுகம் செய்தால் இந்திய தேர்தல் ஜனநாயகத்தையே அது சீர்குலைத்து விடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளடுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து வாழ்வோர், தங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே வாக்களிக்கும் விதமாக ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம் செய்யப்படும் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்தியாவில் சுமார் 30 கோடி பேர் இப்படி புலம் பெயர்ந்து புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். அவர்களின் வாக்குகளை குறிவைத்தே இந்த இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவிஎம் இயந்திரத்தில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், ரிமோட் எலக்ட்ரானிக் ஓட்டிங் இயந்திரம் அறிமுகம் செய்தால் இந்திய தேர்தல் ஜனநாயகத்தையே அது சீர்குலைத்து விடும். எனவே இந்த முயற்சிகளை கைவிட வேண்டும். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.