கழிவுகள் கொட்டியவர்கள் மீது கேரள அரசின் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

திருநெல்​வேலி​யில் மருத்​துவக் கழிவுகளை கொட்​டிய​வர்கள் மீது கேரள அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்​பாயம் உத்தர​விட்​டுள்​ளது.

கேரள மாநிலத்​தில் சேகர​மாகும் மருத்​துவக் கழிவு​கள், அம்மாநில எல்லையை ஒட்டிய திருநெல்​வேலி மாவட்​டத்​தின் வனப் பகுதியான கோடகநல்​லூர், பழவூர், சிவனார்​குளம், கொண்​டாநகரம் ஆகிய இடங்​களில் கடந்த டிச.16, 17, 18-ம் தேதி​களில் கொட்​டப்​பட்டன. இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்​பா​யத்​தின் தென்​மண்டல அமர்வு தாமாக முன்​வந்து வழக்​காகப்பதிவு செய்து விசா​ரித்து வருகிறது. மேலும், அந்த கழிவுகளை 3 நாட்​களில் அகற்ற வேண்​டும் என்று டிச.19-ம் தேதி கேரள அரசுக்கு உத்தர​விட்​டிருந்​தது.

இந்நிலை​யில் இந்த வழக்கு அமர்​வின் நீதித்​துறை உறுப்​பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்​நுட்ப உறுப்​பினர் கே.சத்​யகோபால் ஆகியோர் முன்னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்தது. அப்போது, “கழி​வு​களை கொட்டிய ஒரு புற்று​நோய் மருத்​துவ​மனை, இரு ஓட்டல்கள் ஆகியவை மீது எடுக்​கப்​பட்ட நடவடிக்கை என்ன?” என அமர்​வின் உறுப்​பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, கேரள அரசுத் தரப்பு வழக்​கறிஞர், “அமர்​வின் உத்தரவுப்​படி, திருநெல்​வேலி​யில் கொட்​டப்​பட்ட அனைத்​துக் கழிவு​களும் அகற்​றப்​பட்டன. விதி​மீறல் நிறு​வனங்​களுக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்” என தெரி​வித்​தார்.

அப்போது குறுக்​கிட்ட தமிழ்​நாடு மாசு​கட்டுப்​பாடு வாரிய வழக்​கறிஞர் சாய்​சத்​யஜித், ‘‘இவ்​வாரியம் அனுப்பிய கடிதத்​தின் அடிப்​படை​யில், விளக்கம் கேட்டு தொடர்​புடைய நிறு​வனங்​களுக்கு கேரள மாசு ​கட்டுப்​பாடு வாரியம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. கேரள அரசு அதிகாரிகளே நேரில் பார்​வை​யிட்ட நிலை​யில், அதன் அடிப்​படை​யில்​தான் விளக்கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்பி இருக்க வேண்​டும்” என்று வாதிட்​டார்.

தொடர்ந்து, தமிழக அரசு்​தரப்பு வழக்​கறிஞர் ஆஜராகி, ‘‘திருநெல்​வேலி பகுதி​யில் இருந்து 390 டன் மருத்​துவக் கழிவுகள் மற்றும் ஓட்டல் கழிவுகள் 30 லாரி நடைகளில் அகற்​றப்​பட்​டுள்ளன. இதற்​கிடையே, களியக்​காவிளை பகுதி​யில் வீடு​களில் உருவாகும் திடக்​கழி​வுகளை ஏற்றிவந்த லாரி கடந்த டிச.23-ம் தேதி பொது​மக்​களால் சிறைபிடிக்​கப்​பட்​டது. விதி​மீறல் நிறு​வனங்​களுக்கு நோட்​டீஸ் வழங்கி, 7 நாள் அவகாசம் முடிந்த நிலை​யில், எந்த நடவடிக்கை​யும் எடுக்க​வில்லை. நோட்​டீஸ் வழங்கி இருப்பது வெறும் கண்துடைப்பு​தான். எனவே விதிகளை மீறும் கேரள அரசுக்கு உச்சபட்ச அபராதம் விதிக்க வேண்​டும்” என்றார்.

பின்னர் அமர்​வின் உறுப்​பினர்கள் பிறப்​பித்த உத்தர​வில், ‘‘வி​தி​மீறலில் ஈடுபட்ட நிறு​வனங்கள் மீது நடவடிக்கை எடுக்​காதது ஏன்? என்பது குறித்து கேரள அளவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்​டும். கேரள அரசின் நடவடிக்கை திருப்​தி​யளிக்​கா​விட்​டால், தீர்ப்​பாயமே சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும். கழிவுகளை தமிழகத்​தில் கொட்டுவதை கேரள அரசு நிறுத்த வேண்​டும். எல்லையோர மாவட்​டங்​களில் சிறப்பு அதிரடிப்​படையை அமைத்து கழி​வு​கள் ​கொண்டு​வரப்​படுவதை தடுக்க தமிழக அரசு நட​வடிக்கை எடுக்க வேண்​டும்” என கூறப்​பட்​டுள்​ளது. இந்த வழக்கு மீதான அடுத்த ​விசாரணை ஜன.20-ம் தே​திக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது.