டங்ஸ்டன் திட்டம் கைவிடப்படுவது தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் வெளியிடுவார்: அண்ணாமலை!

டங்ஸ்டன் சுரங்க திட்​டத்தை கைவிடப்படுவது தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் ஒரு வாரத்​தில் அறிவிப்​பார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏ.வல்​லா​ளப்​பட்டி மந்தை திடலில், டங்ஸ்டன் சுரங்க திட்​டத்​துக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் மக்களிடம் நேற்று​ பேசிய அண்ணா​மலை, பின்னர் செய்தி​யாளர்​களிடம் கூறியதாவது:-

டங்ஸ்டன் சுரங்​கத்​துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்​டி​யிடம் தெரி​வித்​தோம். இந்த திட்​டத்​துக்கு மாநில அரசு ஒப்புதல் கொடுக்க வேண்​டாம் என்று மத்திய அரசு உத்தர​விட்​டது. அதன் பிறகும் போராட்டம் தொடர்வ​தால், மக்களை சந்திக்க வந்துள்ளோம்.

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வரும் 17, 18, 19-ம் தேதி​களில் சென்னை வருகிறார். அப்போது, டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்​பட்டதை முறைப்படி அறிவிப்​பார். இல்லா​விட்​டால், போராட்டக் குழு​வில் உள்ள 5 பேரை டெல்லி அழைத்​துச் சென்று, மத்திய அமைச்சரை நேரில் சந்தித்​துப் பேச ஏற்பாடு செய்​யப்​படும். மக்கள் போராட்​டத்​தைக் கைவிட்டு, பொங்கல் பண்டிகையை மகிழ்ச்​சியாக கொண்டாட வேண்​டும்.

டங்ஸ்டன் சுரங்கம் காரணமாக மேலூர் பகுதி​யில் 4,979 ஏக்கர் பரப்​பில் சொத்து வாங்​கவோ, விற்கவோ வில்லங்கச் சான்​றிதழ் வழங்​குவது ‘லாக்’ செய்​யப்​பட்​டிருந்​தது. தற்போது அந்த தடை நீக்​கப்​பட்​டுள்​ளது. இதற்காக மாநில அரசுக்கு நன்றி தெரிவித்​துக்​கொள்​கிறோம். இந்த ​விவ​காரத்​தில் அரசி​யல் செய்ய ​விரும்ப​வில்லை. பிரச்​சினைக்கு தீர்வு ஏற்பட வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறினார்.