நாங்கள் பலமுடன் இருப்பதால் மற்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன: துரைமுருகன்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக பலமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக பலமாக உள்ளது. நாங்கள் பலமுடன் இருப்பதால் மற்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. சட்டப்பேரவையில் மரபை மாற்ற சொன்னது கவர்னர்தான். அவர்தான் தவறு செய்துள்ளார். கவர்னர் கோருவதால் சட்டமன்ற மரபை மாற்ற முடியாது. முதல்வருக்கு இவ்வளவு ஆணவல் நல்லதல்ல என கூறியவருக்கு கவர்னர் என்ற திமிர் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2 நாட்களாக பெரியாரை பற்றி அதிகமாக தரக்குறைவாக பேசுகின்றனர். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, ‛‛பெரியாரை பற்றி தரக்குறைவாக பேசுகிறவனின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன்” என்று கூறினார்.