எல்லைக்காவலன் எங்கள் ஐயன் வீரப்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடும், திமிரோடும் வீரவணக்கம் செலுத்துவோம் என்று சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம்தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-
வீரத்தையும், மானத்தையும் உயிரெனக் கொண்டு, போர்க்குணத்தையும், போராட்ட உணர்வையும் வளர்த்தெடுக்கும் தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு வீரமரபில் வந்த ஒப்பற்ற வீரன்!
ஆயுதமேந்தி, காட்டுக்குள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திட்டபோதும் கண்ணியமும், ஒழுக்கமும் துளியும் பிறழாது வாழ்ந்த ஒழுக்கச்சீலன்!
வாசாத்தி பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக அறச்சீற்றம் கொண்டு நீதிகேட்ட எல்லைச்சாமி!
உயிரைவிட உரிமை உன்னதமானது எனும் உயரியக் கோட்பாட்டுக்கேற்ப, காவிரி நதிநீர் உரிமைக்காகப் போர்க்குரல் எழுப்பிய போராளி!
கர்நாடகாவில் தமிழின மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடும் இனக்கலவரத்தை எதிர்த்து நின்ற மானத்தமிழன்!
கர்நாடகாவில் தமிழ் மறையோன் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் குரலெழுப்பிய தமிழின மீட்பன்!
அரச வன்முறைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஒருநாளும் அஞ்சாது, வீரத்தின் உருவாய் காட்டுக்குள் நின்ற மாவீரன்!
தமிழர் நிலத்தையும், வனத்தையும் ஐயனாராய் காத்து நின்ற எல்லைக்காவலன் எங்கள் ஐயன் வீரப்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடும், திமிரோடும் வீரவணக்கம் செலுத்துவோம்! நாம் தமிழர்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.