பக்தர்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் சேகர்பாபு பேச்சு?: அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூரில் பக்தர்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது.

திருச்செந்தூர் கோயில் கடற்கரைப் பகுதி கடும் கடல் அரிப்பை சந்தித்து வருகிறது. கோயில் முகப்பில் பக்தர்கள் நீராடும் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு, 7 அடி அளவுக்கு பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இந்தப் பகுதியில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பில் இருந்து திருச்செந்தூர் கோயில் கடற்கரையைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். க

இந்நிலையில், கனிமொழி எம்.பி., இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆகியோர் திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

அப்போது, எதிர்புறம் பொது தரிசன வழியில் 4 மணி நேரத்துக்கும் மேலாக அடைக்கப்பட்டு, சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் அமைச்சர்களை நோக்கி திடீரென கோஷமிட்டனர். ‘இங்கே குடிப்பதற்கு குடிநீர் இல்லை. சுவாமியைப் பார்க்க முடியவில்லை. வெளியே போகவும் முடியவில்லை. இருபுறமும் கூட்டமாக இருக்கிறது. குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்படுகிறோம்’’ என குரல் எழுப்பினர்.

அப்போது, அமைச்சர் சேகர்பாபு தனது அருகில் இருந்தவர்களிடம், “திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருப்பான், அது கணக்கு கிடையாது’’ என்று பேசியவாறு நடந்து சென்றுள்ளார். பக்தர்களின் கோஷம் மற்றும் அமைச்சரின் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பக்தர்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் பேசியதாக, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:-

திருச்​செந்​தூர் கோயி​லில் பக்தர்களை ஒருமை​யிலும் அலட்​சி​ய​மாக​வும் பேசி​யுள்​ளார் அமைச்சர் சேகர்​பாபு.
திருப்பதி கோயி​லில் மக்களுக்கு அனைத்து வசதி​களும் செய்திருக்​கிறார்​கள். உண்டியல் பணத்தை முறைகேடாகச் செலவழிப்​ப​தில்லை. கோயில் பிரசாதத்​தில் கமிஷன் அடிப்​ப​தில்லை.

கோபாலபுரம் குடும்பத்​துக்கு நெருக்கம் என்ற ஆணவத்​தில் ஆடிக் கொண்​டிருக்​கிறார் அமைச்சர் சேகர்​பாபு. இதைவிட அதிகார மமதை​யில் ஆடிய​வர்​களுக்​கெல்​லாம், காலம் பாடம் புகட்​டி​யிருக்​கிறது. தனது தவறுகளுக்கு அமைச்சர் சேகர்​பாபு ஆண்ட​வனுக்​கும், மக்களுக்​கும் பதில் சொல்லத் தயாராக இருக்​கட்டும். இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இதேபோல, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்​பிரமணியம் வெளி​யிட்​டுள்ள அறிக்கை​யில், “பக்​தர்​களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருவது அரசின் கடமை. அமைச்சரே பக்தர்களை அவமதித்​தால், அதிகாரிகள் எப்படி நடந்து கொள்​வார்​கள்? திருச்​செந்​தூரில் பக்தர்​களுக்கு அடிப்படை வசதிகளை செய்​ய​வும், கடல் அரிப்​பில் இருந்து கோயிலைப் பாது​காக்​க​வும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். மேலும், பக்தர்களை அவமதித்த அமைச்சர் சேகர்​பாபு மற்றும் க​னி​மொழி எம்​.பி. ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்.