சனாதன விவகாரத்தில் விரைவிலேயே உதயநிதி கைது செய்யப்படுவார் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறியதாவது:-
கூடிய விரைவில் எல்லா மாநிலங்களிலும் உதயநிதிக்கு எதிரா பிடிவாரண்ட் வந்து விடும். சீக்கிரமாகவே ஜெயிலுக்கு போகி விடுவார். சனாதன இந்து தர்மத்தை நீ டெங்கு கொசு மலேரியா கொசு மாதிரி கொன்னுடுவியா? அவ்ளோ திமிரு உங்களுக்கு இருக்கா? துணை முதல்வர் என்றால் பெரும்பான்மையாக உள்ள 80% மக்களை கொல்லலாமா? அவர்களை டெங்கு, மலேரியா கொசு மாதிரி அழிப்பேன்னு பேசுவாரா?
அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் யார் இந்த சார் ஏன்னு சொல்ல உதயநிதிக்கு துப்பு இல்லை. ஆனா இந்து மதத்தை கொசு மாதிரி கொல்லலாம் என்று அவர் பேசலாமா? இந்த தேச விரோத தீய சக்திகள் 2026 இல் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம் வள்ளுவர் மற்றும் வள்ளலாரை களவாட பார்க்கிறார்கள் என்ற முதல்வரின் கருத்து தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எச். ராஜா. “சனாதன இந்து தர்மத்தில் தர்மம் என்றால் அறம், அர்த்தம் என்றால் பொருள், காமம் என்றால் இன்பம். இந்த மூன்றில் உங்கள் வாழ்க்கை அமையுமானால் மோட்சம் கிடைக்கும். சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் தானே திருவள்ளுவர் திருக்குறளை எழுதியுள்ளார். ஜோதி வடிவில் இறைவனை வள்ளலாளர் வணங்க சொன்னதும் சனாதனம் தான்.
திருக்குறளை மலம் என்று கூறியவரை நீங்கள் அப்பா என்று சொல்கிறீர்கள். தந்தை என்றால் அப்பாதானே. சிலப்பதிகாரத்தை விபச்சாரியின் கதைன்னு ஈவெரா சொல்லவில்லையா? இந்து மதத்தின் தமிழ் மொழியில் மிகப்பெரிய விரோதிகள் இந்த திராவிட இயக்கத்தவர்கள். என் தாய் மொழி தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன ஈவெராவை தந்தை என்று சொல்கிறவர்கள் எல்லாம் தமிழ் மொழியின் விரோதிகள். திருவள்ளுவருக்கு இது தான் உடை என்று உங்களுக்கு தெரியுமா? எனக்கும் தெரியாது. நீங்க வெள்ளை உடை அணியலாம் நான் காவி போடக்கூடாதா? என் இஷ்டம்” என்று தெரிவித்தார்.