தவெக​வில் இணைந்த ஆதவ் அர்ஜுனா திருமாவளவனுடன் சந்திப்பு!

விசிகவில் இருந்து விலகி தவெக​வில் இணைந்த ஆதவ் அர்ஜுனா​வுக்கு, தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்நிலை​யில், விசிக தலைவர் திரு​மாவளவனை சென்னை​யில் உள்ள விசிக அலுவல​கத்தில் ஆதவ் அர்ஜுனா நேற்றிரவு சந்தித்து வாழ்த்து பெற்​றார்.

பின்னர் செய்தி​யாளர்​களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, ‘‘என்னுடைய ஆசான் திரு​மாவளவனிடம் ஆசி பெறுவதற்காக வந்தேன். தமிழக வெற்றிக் கழகத்​தில் என்னுடைய பொறுப்பு கொள்கை ரீதி​யாக, மக்கள் நலனுக்​கானதாக இருக்​கும். பெரி​யார், அம்பேத்கர் கொள்​கை​யின்படி என் பயணம் இருக்​கும். தவெக​வும் விசிக​வுக்​கும் கொள்கை ரீதியாக ஒற்றுமை​யாக​தான் இருக்​கிறோம். விஜய்​யும், திரு​மாவளவனும் ஒரே கொள்கை, ஒரே கருத்​துட​ன்​தான் இருக்​கிறார்​கள்’’ என்றார்.

திரு​மாவளவன் கூறும்​போது, ‘‘தமிழக அரசி​யலில் புதிய அணுகு​முறையை ஆதவ் அர்ஜூனா தொடங்கி வைத்​திருக்​கிறார். விசிக​வில் இருந்து வெளி​யேறி இன்னொரு கட்சி​யில் சேர்ந்து, பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்று செயல்​படும் சூழலில் என்னுடைய வாழ்த்​தும் தேவை என விசிக அலுவலகம் தேடி வந்திருக்​கும் அவரது அணுகு​முறையை தமிழக அரசியல் கற்றுக்​கொள்ள வேண்டும். கருத்​தியல் ரீதி​யாக​வும், களத்​தி​லும் எதிரெ​திர் துரு​வங்​களாக நின்று செயல்​படுகிற நிலை இருந்​தா​லும்கூட இத்தகைய நட்புறவை பேணுவது நாகரி​கமான அணுகு​முறை. இதில் எந்த அரசியல் கணக்​கும் இல்லை. எந்த ​முடிச்​சும் ​போட்டு பார்க்க வேண்டிய அவசி​ய​மும் இல்​லை’’ என்​றார்​.