தமிழகம் மீது பாஜகவுக்கு அக்கறை இல்லை என்பதா?: தமிழிசை கண்டனம்!

பாஜக​வுக்கு தமிழகம் குறித்து அக்கறை இல்லை என்பது போன்று பேசுவது தவறு என திமுகவுக்கு முன்​னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரி​வித்​துள்ளார்.

சென்னை​யில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:-

தமிழக வெற்றிக் கழகம் ஓராண்டை நிறைவு செய்​தமைக்கு வாழ்த்து​கள். மத்திய பட்ஜெட்​டில் தமிழகம் என்ற வார்த்தை இல்லை என்று திமுகவினர் கூறுகின்றனர். வருமான வரி உச்சவரம்பு உயர்வு தமிழகத்​துக்​கும் தான். நாடாளு​மன்​றத்​தில் தமிழ், தமிழகம், திருக்​குறள் பெரு​மைப்​படுத்​தப்​பட்​டிருக்​கிறது. பிகார் மாநிலம் வளர்ந்து வருவதன் அடிப்​படை​யில் திட்​டங்கள் வழங்​கப்​பட்​டிருக்​கின்றன.

தமிழகத்​துக்கான நிதி கிடைக்க வேண்​டும் என்ப​தில் பாஜக​வும் குறிக்​கோளுடன் இருக்​கிறது. பாஜக​வுக்கு தமிழகம் குறித்து அக்கறை இல்லை என்பது போன்று திமுகவினர் பேசுவது தவறு. பாஜகவோடு போட்​டி​யிடும் தன்மை திமுக​வுக்கு இல்லை. பாஜக​வினர் பங்கேற்​கும் நிகழ்ச்​சிகளில் பவர் கட் செய்வது வாடிக்கை​யாகி​விட்​டது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்​தில் பத்திரி​கை​யாளர்​களின் செல்​போன்களை பறிப்பது கண்டிக்​கத்​தக்​கது. இந்த வழக்கு விசாரணை அதிகாரி விலகும் அளவுக்கு திமுக அரசு அழுத்தம் கொடுத்​திருக்​கிறது.

சுங்கக் கட்ட​ணத்தை தவிர்க்கவே, ஈசிஆர் விவகாரத்​தில் பயன்​படுத்​தப்​பட்​டுள்ள காரில் திமுக கொடி கட்டப்​பட்​டிருப்​பதாக காவல்​துறை சொல்​வதன் மூலம் தவறு செய்​வதற்கு திமுக கொடியை பயன்​படுத்​தலாம் என ஒப்புக்கொள்​கின்​றனர். திமுக கொடிக்கு நம்பகத்​தன்மை இல்லை என்பதை ஆர்.எஸ்​.பார​தி​யும், காவல்​துறை​யும் ஒப்புக்கொள்​கின்​றனர். திமுக கொடி பறக்​கும் கார்​களில் குற்​றவாளிகள் இருக்​கிறார்களா என்பதை விசா​ரிக்​கும் நிலை​யில் தமிழகம் இருக்​கிறது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்​தி​லும் எந்த கட்சிக்​கும் முதலில் தொடர்​பில்லை என கூறிய நிலை​யில், மாசுபட்​டவர் யார் என இதுவரை தெரிய​வில்லை. முதலில் ஆதவ் அர்ஜுனாவை அனுப்​பி​விட்டு பின்னர் ஆதவனிடம் இருந்து ​திரு​மாவளவன் வெளி​யேறு​வாரா என்று தெரிய​வில்லை. இவ்​வாறு அவர் கூறினார்.