மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது, இயற்கை பேரிடர் காலத்தில் தமிழகத்திற்கு நிதி வழங்காதது போன்ற மத்திய அரசின் பழிவாங்கும் செயலை கண்டிப்பதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் நடப்பு ஆண்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டல் பீகார் மாநிலத்திற்கு மட்டும் சிறப்பு அறிவிப்புகள் இடம் பெற்றதாக எதிர்க்கட்சிகள் கூறின. மேலும் பயனற்ற பட்ஜெட் எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்த நிலையில் தமிழகத்தை பழிவாங்கும் மத்திய அரசின் செயலை கண்டிப்பதாக செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஒன்றிய அரசின் கொள்கையுடன் ஒத்துப்போகாத மாநில அரசுகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது ஆளும் பாசிச பா.ஜ.க அரசு. தமிழ்நாட்டில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட இதுவரை நிதி ஒதுக்கவில்லை. தற்போது தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2152 கோடியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டிருப்பது அராஜகத்தின் உச்சம். தமிழ்நாடு மாணவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் இந்த பழிவாங்கும் போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன்.
ஆளும் பா.ஜ.க. அரசின் ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் வரி செலுத்துவதற்கேற்ப ஒன்றிய அரசிடம் இருந்து நிதி கேட்பது அற்ப சிந்தனை என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டிருப்பது அற்ப சிந்தனை இல்லையா.
தமிழகத்தில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை மற்ற மாநிலங்களுக்கு வழங்கியிருப்பது அராஜகத்தின் உச்சம். தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் மத்திய அரசின் பழிவாங்கும் போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.