நிர்மலா சீதாராமனின் கனவு நிறைவேற வாழ்த்துகள்: தயாநிதி மாறன்!

தமிழ்நாடு முதல்வராகலாம் என்று கனவில் இருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அதைவிட பெரிய பதவி கிடைக்கும் என கனவு காண்கிறார்; நிர்மலா சீதாராமனின் கனவு நிறைவேற வாழ்த்துகள் என நாடாளுமன்ற லோக்சபாவில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசினார்.

லோக்சபாவில் பட்ஜெட் குறித்த விவாதத்தின் மீது தயாநிதி மாறன் எம்பி பேசியதாவது:-

மத்திய பட்ஜெட்டில் பீகார் தேர்­தலை முன்­னிட்டு அங்கு அதிக திட்­டங்­களை அறி­வித்­துள்­ள­னர். ஆனால் தென் மாநி­லங்­களை நியா­ய­மற்ற முறை­யில் நடத்­து­கி­றார்­கள். தமிழ்­நாடு மற்­றும் கேர­ளா­வில் அடுத்த ஆண்டு தேர்­தல் நடை­பெற உள்­ள­தால், அடுத்த ஆண்டு பட்­ஜெட்­டில் போனஸ் அல்­லது மாயா­ஜால அறி­விப்பை பார்க்­க­லாம். கன்­னி­யா­கு­மரி – திரு­வ­னந்­த­பு­ரம் தொழில் வழித்­த­டம் மீண்­டும் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது. பெங்­க­ளூர், சென்னை, ஐத­ரா­பாத் போன்ற தக­வல் தொழில்­நுட்ப மையங்­கள் பொரு­ளா­தா­ரத்­தில் பங்­க­ளிப்பு செய்­தா­லும், அவர்­க­ளுக்கு எந்த சலு­கை­யும் இல்லை.

கடந்த வாரத்­தில், தமி­ழக மாண­வர்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்ட சுமார் ரூ.2,000 கோடியை மத்­திய அரசு எடுத்­துக்­கொண்டு மற்ற மாநி­லங்­க­ளுக்கு திருப்­பி­ய­ளித்­துள்­ளது. மாண­வர்­க­ளைத் தண்­டிக்­கும் மத்திய அரசு பற்றி கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றீர்­களா? மும்­மொ­ழிக் கொள்­கையை ஏற்க மாட்­டோம் என்­ப­தில் மிகத் தெளி­வாக இருக்­கி­றோம். எங்­கள் முதல்­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அதை ஒரு­போ­தும் அனு­ம­திக்க மாட்­டார். எங்­கள் மாண­வர்­கள் பாதிக்­கப்­ப­டா­மல் இருப்­பதை உறுதி செய்­வோம். எங்­கள் சொந்த நிதி­யில் அவர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­போம். இந்­தி­யா­வி­லேயே திரா­விட மாடல் அடிப்­ப­டை­யில் வெற்றி பெற்ற மாநி­லம் ‘தமிழ்­நாடு’.

இன்று நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் இவ்­வ­ளவு உய­ரங்­களை எட்­டி­யி­ருக்­கி­றார் என்­றால் அதற்­குக் கார­ணம் பெண்­கள் கல்வி கற்­கும் பெரி­யார் என்ற ஒரு மனி­த­னால்­தான். அதை அவர் மறக்­கவே கூடாது. 2017 ஆம் ஆண்டு, ஜெய­ல­லிதா மறை­வுக்­குப் பிறகு அவர் தமிழ்­நாட்­டில் இருந்­தார். முதல்­வ­ரா­க­லாம் என்று நினைத்து, அந்த பத­விக்­காக ஏங்­கிக் கொண்­டி­ருந்­த­தால், இந்த ஆண்டு நீட் வராது, இந்த ஆண்டு தமி­ழ­கத்­துக்கு நீட் விலக்கு என்று கூறி­னார். அனைத்து மாண­வர்­க­ளும் நம்­பி­னர். ஆனால் நாங்­கள் நம்­ப­வில்லை. ஏனென்­றால் அவர் சொன்­னது நிறை­வே­றாது என்று எங்­க­ளுக்­குத் தெரி­யும். எங்­கள் மக்­களை கவர, அவர் முயற்­சித்­தார். அதே­போன்று அவர் இப்­போது ஒரு பெரிய பத­விக்­காக முயற்சி செய்து இருக்­கி­றார். அவர் தமிழ்­நாட்­டைச் சேர்ந்­த­வர் என்­ப­தால் நாங்­கள் அவரை வாழ்த்­து­கி­றோம்.

இந்­தி­யா­வின் மக்­கள் தொகை 140 கோடி. 2023-–24ல் 8 கோடி பேர் (5.7%) மட்­டுமே வரு­மான வரிக் கணக்கு தாக்­கல் செய்­துள்­ள­னர். இவர்­கள்­தான் நேரடி வரி செலுத்­து­ப­வர்­கள். அவர்­க­ளில் 4.15 கோடி பேர் மாதம் ரூ.50,000க்கும் குறை­வா­கவே சம்­பா­திக்­கி­றார்­கள். 1.5 கோடி பேர் மாதத்­திற்கு ரூ.1 லட்­சத்­துக்கு மேல் சம்­பா­திப்­ப­தால், வரிச் சலு­கைக்கு அவர்­கள் தகுதி பெற­வில்லை. இத­னால் பயன்­பெ­றும் 2.5 கோடி பேர் மட்­டுமே எஞ்­சி­யுள்­ள­னர். இது மக்­கள் தொகை­யில் 1.75% மட்­டுமே. இந்த நட­வ­டிக்கை டெல்­லி­யில் பாஜக வாக்­கு­க­ளைப் பெற உத­வி­யது. இது ஒரு குறு­கிய கால இனிப்பு. நிலை­யான தீர்வு அல்ல. ஆனால் வளர்ச்சி தேக்­க­மடைந்ததால், விலை­வாசி உயர்ந்­துள்­ள­தால் அவர்­க­ளுக்­கும் இதில் எந்த பல­னும் இல்லை. எஞ்­சிய 98.25% இந்­தி­யர்­க­ளுக்கு 12 லட்­சம் வரு­மான வரிச் சலு­கை­யால் எந்த லாப­மும் இல்லை. இந்த நாட்­டின் ஒவ்­வொரு குடி­ம­க­னும் மறை­முக வரி­கள் மூலம் அதி­க­ள­வில் செலுத்­து­கி­றார்­கள். இவ்­வாறு தயா­நிதி மாறன் பேசினார்.