தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ‘Y’ பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் இருப்பார்கள்.
பொதுவாக ‘Y’ பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பர்; விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும். சமீபத்தில் விஜய் மேற்கொள்ள போகும் பயணங்களில் முட்டை அடிக்க வேண்டும் என்று சில நெட்டிசன்கள் ட்விட்டரில் நடந்த குழு உரையாடல்களில் பேசியது டிரெண்டான நிலையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் (VVIPs, VIPs) பாதுகாப்புக்கு மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு பாதுகாப்பு அளவுகோள்களை வைத்து உள்ளது. அதன்படி பாதுகாப்பு தேவையின் அடிப்படையில், அவர்களுக்கு X, Y, Z, Z+ போன்ற பாதுகாப்பு பிரிவுகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ‘Y’ பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் இருப்பார்கள். பொதுவாக ‘Y’ பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பர்; விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் இந்த வருடம் தமிழ்நாட்டில் நடைபயணம் தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் விஜய் நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் விஜய் பிரபலமாகி இருந்தாலும் விஜய் கட்சி பிரபலம் இல்லை . விஜய் கட்சிக்கு என்று வார்டு ரீதியாக நிர்வாகிகள் இல்லை. இதை எல்லாம் உருவாக்க பல வருடங்கள் ஆகும். ஆனால் அதற்கு ஒரு ஷார்ட் கட் உள்ளது. அது நடைபயணம். இதற்காக நடைப்பயணத்தை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.