நடிகை ஒரு பாலியல் தொழிலாளி; அதற்கான ஆதாரங்களை தாம் காட்டுவேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-
இந்த திருட்டுக் கூட்டத்தை (திராவிடம்) தவிர வேறு ஒரு அரசியல் ஆற்றல் இந்த நிலத்தில் முளைத்துவிடக் கூடாது என்கிற அச்சம்தான். ஒரு திருடனுக்கு திருடன் பாதுகாப்பாக இருப்பான். அதை அண்டி, ஒண்டி வாழ்கிறவன் வேறு எதை எதிர்த்துப் பேசுவான்? கம்யூனிஸ்டுகள் திமுகவை எந்த இடத்தில் எதிர்த்து கருத்து சொல்வீர்கள்? சம்மன் விவகாரம் தம்பி.. மல்லிகைப்பூவாலும் மயில் இறகாலும் வருடிவிடுவது அல்ல கூட்டணி என்பது.. உங்களால் திமுகவுக்கு எதிராக எதில் கருத்து சொல்ல முடிகிறது? எதில் உங்களுக்கு கருத்து சொல்லத்தான் முடியும்? இவ்வளவு பேசுகிறீங்கள்.. என் வீட்டில் எல்லோரும் இருக்கும் போது, ஆள் இருக்கும் போது, எதுக்கு சம்மனை கதவில் ஒட்டனும்? அது அவசியமானதா? சரி. அந்த சம்மனை ஒட்டியதுடன் காவல்துறையின் வேலை முடிந்துவிட்டதுதானே.. அந்த சம்மனை கிழித்தால் என்ன? வைத்திருந்தால் உனக்கு என்ன? சம்மனை கிழித்ததற்காக எதற்கு அடித்தாய்? சீருடை இல்லாத காவலர்கள் எதற்காக அடித்து இழுத்துக் கொண்டு போனீங்க?அதுவும் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரரை.. என் வீட்டில் இருக்கும் போது அடித்து இழுத்துட்டுப் போறீங்க.. அடித்து இழுத்துக் கொன்டு போகிற அளவுக்கு ஒரு குற்றமும் இல்லையே.. அவரை சிறைப்படுத்துகிற அளவுக்கு குற்றம் இல்லையே.. இதை பற்றி எல்லாம் பேசாத கம்யூனிஸ்ட் என்ன கம்யூனிஸ்ட்?
நீ எப்படி குற்றவாளி என சொல்லுவ? விசாரணை இருக்கும் போது என்னை எப்படி நீ குற்றவாளி என சொல்லுவ? தீர்ப்பு வரட்டும்.. தீர்ப்பு வந்த பிறகுதானே பேசனும்? நீயே தீர்ப்பு எழுதி படிப்பியா? மதிப்புமிக்க அரசியல் தலைவர்கள், இதுவரை வாய் திறக்காமல் இப்ப வாய் திறக்க வேண்டிய தேவை என்ன? நான் தான் உண்மையில் கம்யூனிஸ்ட்.. ஏனெனில் நீங்க செய்ய வேண்டிய வேலைகளை நான் செய்து கொண்டிருக்கிறேன்.. “Enjoyment without Responsibility” பற்றி நீங்கதான் பேசுறீங்க.. எவனாவது பாசத்துக்கு புள்ளைய பெத்துக்குவானா தேவைன்னா அப்படியே போய்ட்டு வந்துடனும்.. குடும்பம் என எவனாவது வாழ்ந்துகிட்டு இருப்பானா? Enjoyment without Responsibility என அய்யா ஆங்கிலத்திலேயே சொல்கிறாரே” என்று சொன்னது யார்? பெரியார் சொன்னதாக இப்ப இருக்கிற ஒரு அய்யா சொல்கிறார். Enjoyment without Responsibility என சொன்னது உங்க பெரியார்.. அப்படிப்பட்ட பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கீங்க.. Enjoyment without Responsibility-ல் உங்க Responsibility என்ன?அம்மையார் கனிமொழிக்கும் சேர்த்துதான் கேட்கிறேன்.. கம்யூனிச தோழர்களுக்கும்தான் கேட்கிறேன்..
பெரியார் சொன்னதைத்தான் செஞ்சேன்.. பெரிய்ய.. பெரியார் என தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்களே.. அவர் சொன்னதுதான்.. அவர் சொன்னதைத்தான் நான் செஞ்சேன்னு வெச்சுக்குங்க.. அதில் உனக்கு என்ன பிரச்சனையாகுது? ஏம்பா உங்க தலைவர் சொன்னதைத்தானே நாங்கள் கடைபிடிக்கிறோம். அதில் உங்க கருத்து என்னப்பா? என்ன விளையாட்டு பண்ணிகிட்டு இருக்கீங்க? நடமாடவே முடியாது.. நான் திருப்பி ஒவ்வொன்றையும் பேச ஆரம்பித்தால் நீங்க வெளியில் நடமாட முடியுமா? அமைதியாக போங்க..
என் மீது பலாத்கார புகார் தெரிவித்த நடிகை பாலியல் தொழிலாளி.. அவ பாலியல் தொழிலாளி என்பதற்கான ஆதாரங்களை நான் காட்டவா? 15 ஆண்டுகள் நான் கண்ணியமாக இருந்த போது நீங்கள் எல்லாம் என்ன ** செய்தீர்கள்? அவ தான் பொண்ணா.. அவளுக்குதான் மனசு இருக்கா? எங்கள் வீட்டில் பெண்கள் இல்லை? எங்களுக்கு நீதி இல்லையா? என் மனைவிக்கு வலி இல்லையா? என்னைப் பெற்ற தாய் இல்லையா? என் உடன்பிறந்த அக்கா தங்கை இல்லையா? என்னை நேசிக்கிற உலகம் முழுவதும் வாழ்கிற சொந்தங்கள் எனக்கு இல்லையா? என்னை உயிராக நேசித்து வாழுகிற என் மனைவி பெண் இல்லையா? அவளுக்கு எல்லாம் மனசு இல்லை.. காயம் இல்லை?
உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு? ஒரு சமூகத்தை நேசிக்கிற மகனை இப்படி தினமும் முச்சந்தியில் நிற்க வைத்து அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு எல்லாம் என்ன தகுதி இருக்கிறது? இந்த நாட்டை என்னடா புண்ணியவானும் கண்ணியவானுமா ஆண்டுகிட்டு இருக்கீங்களா? என்னை கேள்வி கேட்க உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு? நீ யார் என்னை பாலியல் குற்றவாளி என சொல்ல? நான் நடிகை குறித்து கேள்வி கேட்டதில் கண்ணியம் குறைந்துவிட்டது எனில் நீங்கள் செய்கிற செயலுக்கு என்ன பெயர்? நீ எப்படி என்னை பாலியல் குற்றவாளி என முடிவு செய்கிற? விசாரணைதானே நடக்கு.. நீ எப்படி என்னை பாலியல் குற்றவாளி என முடிவு செய்த? உன்னை அப்படி யார் பேச சொன்னது?
நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தது நான்.. வழக்கு நடந்து கொன்டிருக்கிறது.. அதற்குள் என்னை பாலியல் குற்றவாளி என சொல்ல நீ யார்? நீ யார்? எப்படி சொல்லுவ? ஒரு பெண் சொல்வதுதான் உண்மை என எப்படி நம்புவீங்க? என்பதுதான் கேரளாவில் நேற்று வந்த தீர்ப்பு. நானும் உங்க மேல பழி சொல்லவா? நானும் உங்க மேல பழிசொல்லவா? ஆயிரம் பேர் என்மீது பழி சொல்லலாம் தம்பி.. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது நீங்க எப்படி என்னை பாலியல் குற்றவாளி என சொல்லலாம்? விசாரணையின் முடிவில்தான் அனைத்தும் தெரியனும்.. அதற்குள் ஏன் என் மீது குற்றச்சாட்டை வைக்கிற? உன் நோக்கம் என்ன? நீ என்ன தகுதி, அருகதை பற்றி பேசுகிற? நீங்க முதலில் தலைமைப் பண்புடன் நடந்து கொள்ளுங்க..
அம்மையார் கனிமொழி, அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு வாய் திறந்தாங்களா? ஶ்ரீமதி சாவில் உங்கள் கருத்து என்ன? ஏனெனில் அங்கே யாரும் இல்லை.. இங்கே சீமான் இருக்கிறான்.. என்னை பார்த்து நீங்க நடுங்குகிறீங்க.. திராவிடப் பன்னிகளின் ரத்தத்தை உறிஞ்சுகிற உண்ணிகளான காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்ட்டுக்கும் என்ன தகுதி இருக்கிறது? மும்மொழிக் கொள்கையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் நிலைப்பாடு என்ன? புதிய கல்விக் கொள்கையில் உங்க நிலைப்பாடு என்ன? கருத்து என்ன? காவிரி, கச்சத்தீவு, முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உங்கள் நிலைப்பாடு என்ன? நீ கம்யூனிஸ்ட்டே இல்லை.. உனக்கு தர்க்கம் என்ன? நீங்கள் எல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளாகிவிட்டீர்கள்?
எது வளர்ச்சி என்று கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியவில்லை. வளங்களை அழிப்பதே வளர்ச்சி என்பதுதான் உங்களின் கொள்கையா? உருவாக்க முடியாத இயற்கை வளங்களை அழிக்க உங்களுக்கு உரிமையை கொடுத்தது யார்? தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் டன் பாறைகள் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளாவின் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுகிறது. இவ்வாறு ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.