தமிழ்நாடு பட்ஜெட் லோகோவை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

நாளை தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில், மக்களுக்கு அரசு வழங்கிய நலத்திட்டங்கள் தொடர்பாக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட். தமிழகத்தின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதி செய்யும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதில் இந்தியா ரூபாய் குறியீடு ₹ பதிலாக “ரூ” இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு போன்ற தகவல்களை அவர் வெளியிட இருக்கிறார். அதேபோல், 2025-26 ஆம் ஆண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவர் அளிக்கவுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு பல்வேறு திட்டங்கள் இடம் பெற வாய்ப்புள்ளது. பட்ஜெட் தாக்கல் நிகழ்வு முடிந்ததும், அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும். அந்த கூட்டத்தில் பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது, என்னென்ன அலுவல்களை எடுப்பது போன்றவை குறித்து முடிவு எடுக்கப்படும்.

தமிழ்நாடு 2025-26 பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில், “எல்லார்க்கும் எல்லாம்” சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட” எனக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார், 2025-26ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் பட்ஜெட் இலச்சினை இடம்பெற்றுள்ளது. அதில் இந்தியா ரூபாய் குறியீடு ₹, பதிலாக *ரூ* இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது.