எனது இரு மகன்களின் பெயர் பழனி மற்றும் வேல் என்பதுடன், அவர்கள் எல்கேஜி முதல் பட்டப்படிப்பு வரையில் இருமொழி கொள்கையில் தான் பயின்றார்கள் என அண்ணாமலைக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
நாடளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாடு அரசின் பிரதிநித்திவத்தை குறைக்கும் மத்திய அரசை கண்டித்து மதுரை டிஎம் கோர்ட் பகுதியில் திமுக மதுரை மாநகர் மாவட்டம் சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-
நமது எதிரிகளான பாஜக அரசின் அமைச்சர் முன் வைக்கும் வாதம் குறித்து பேச விரும்புகிறேன். இந்திரா காந்தி ஆட்சியில் தேசிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது, பிறகு திருந்த மசோதாவாக நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. NEP 2020, எந்தவித சட்ட மசோதாவுக்கு நிறைவேற்றாமல், விருப்ப மசோதாவாக நிதியை நிறுத்தி வைத்து அடாவடி செய்கின்றனர். 1968க்கு பிறகு கொண்டுவந்த கல்வி கொள்கையில் தென் மாநில மொழியை கற்கவேண்டும் என்று சிபாரிசு சொன்னார்கள். குறிப்பாக ஆசிரியர்கள் நியமிக்க முடியாத சூழல் நிலவியது, இந்தி பேசாத மாநிலங்களில் அது தோல்வி என்று 20 ஆண்டுகளில் அறிந்து உத்திர பிரதேசத்தில் கூட ஒருமொழி கொள்கையை கூட நிறைவேற்ற முடியாமல் பிஎம்ஸ்ரீ நிதியை நிறுத்தி வைத்துவிட்டு தெருவில் ரவுடி பேசுவது போல் பேசி வருகின்றனர். எல்கேஜி மாணவன், உயர்கல்வி பயின்ற மாணவனுக்கு கற்பிப்பது போன்று உள்ளது.
புதிய கல்வி கொள்கையை நடைமுறைபடுத்துவது இன்றைக்கு சாத்தியமே இல்லை, அதற்கான நிதி உட்கட்டமைப்பு என்பது இல்லை, அனைவருக்கும் ஒரே கல்வியை கொடுக்க வேண்டும் என்ற முடிவால் தமிழ்நாடு சிறந்த முறையில் கல்வியில் சிறந்து காணப்படுக்குறது. அதைவிடுத்து 34 அமைச்சர்கள் மகன்கள் எங்கே படிக்கிறார்கள் என்று தனிப்பட்ட கேள்வியாக மாற்றி வருகின்றார்கள், விருப்பம் உள்ளவர்கள் தனியாக கூடுதல் வகுப்பு சென்று படிக்கட்டும். தமிழ்நாட்டில் 8 கோடி பேருக்கு சேர்த்த கல்விதான் சிறந்தது. பாஜக பிரதிநிதி ஒருவர் எனது மகன்கள் எந்த மொழியில் பயின்றார்கள் என்று கேட்கிறார்கள். எனது இரு மகன்களின் பெயர் பழனி மற்றும் வேல் என்பதுடன் அவர்கள் எல்கேஜி முதல் பட்டப்படிப்பு வரையில் இருமொழி கொள்கையில் தான் பயின்று வந்துள்ளார்கள். இந்தியை முன்னிறுத்தி வருவதை எதிர்க்கத்தான் செய்வோம். எங்காவது ஒரு இடத்தில் மும்மொழி கொள்கையில் பயின்று வெற்றி பெற்ற மாணவர்கள் கொண்ட சமுதாயத்தை உருவாக்கிய பிறகு நாங்கள் விவாதத்திற்கு வருகிறோம், அதுவரை இரு மொழி கொள்கைதான் தமிழ்நாட்டில்.
வரலாற்றில் பல அரசுகள் ஆட்சி செய்த இந்தியாவில், இன்றைக்கு மைய அதிகாரமாக உள்ளது. வெளி நாடுகளில் இத்தகைய நிலை இல்லாமல் மாகானங்களுக்கு முக்கியத்துவம் பெற்று இருக்கும். தொகுதி மறுவரையரையால் பல்வேறு பிரதிநிதித்துவத்தை இழக்கும் வாய்ப்பு உள்ளது. 45 % பொருளாதாரம் அதிகமான தென்மாநிலங்களில் மக்கள் தொகை கொண்ட நிலையில், ஏழைகள் அதிகம் கொண்ட வட மாநிலங்களில் அதிக மக்கள் தொகை அதிகமானதால் அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் தொகுதி மறுவரையில் வரும் காலங்களில் பிரதிநிதித்துவத்தை சூழல் ஏற்படுகிறது. அதனால் தமிழக முதல்வர் தென் மாநிலங்களை ஒருங்கிணைக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளார். அவரின் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், என்பதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.